ஏ. ஆர். ரஹ்மான் முன்னிலையில் மைக்கை தூக்கி எறிந்த ரா.பார்த்திபன்!
சினிமாவில் எதையும் வித்தியாசமான முறையில் செய்து, தனி பெயர் பெற்றவர் இயக்குநர், நடிகருமான ரா.பார்த்திபன். சமீபத்தில் “ஒத்த செருப்பு” படத்திற்கு விருது கிடைக்கவில்லை என அவர் விருது மேடையில் பேசி சர்ச்சைக்கு உள்ளாக்கினார்.
சமீபத்தில் அவர் இயக்கி வெளியாக இருக்கும் “இரவின் நிழல்” படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். முதல் “ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத காட்சிகள் கொண்டு, ஒரே முழு நீள வெட்டாக வெளியாகும் தொடர் படம்” என்ற சாதனையோடு வெளியாகும் இந்த படத்தின், இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
அப்போது ஏ. ஆர்.ரஹ்மானுடன் பேசிக் கொண்டிருந்த ரா.பார்த்திபன். பாட்டை எப்படி வெளியிடலாம் என பேசிக் கொண்டிருக்கையில் மைக் சரியாக வேலை செய்யவில்லை. அதை ஆடியோ டிபார்ட்மெண்ட் ஆள் சுட்டிக் காட்ட “இதை மொதல்லயே சொல்லலாம்ல” எனக் கூறி மைக்கை கூட்டத்தில் விட்டெறிந்தார்.
இதனால் ரஹ்மான் உள்ளிட்ட மற்ற குழுவினர் அதிர்ச்சியாகினர். ஏற்கனவே ஒத்த செருப்பு படப்பிரச்சினை சர்ச்சையானது போதாமல், இதுவும் சர்ச்சை ஆகி வருகிறது. புது புது முயற்சிகள் எடுத்தால் மட்டும் போதாது. பண்பாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறி விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.