அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பு ஏற்றார் கமல் ஹாசன்

மக்கள் நீதி மைய கட்சி தலைவரும், உலக நாயகன் கமல் ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தற்போது ஆவலாக காத்திருக்கிறார்கள். விரைவில் படம் வெளியாகும் என்று ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

கமல் ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மைய காட்சியை துவங்கி, தேர்ததலில் பங்குபெற்றது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அரசியலில் முழு நேரம் ஈடு பட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார் கமல் ஹாசன். தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் கமல் அவ்வப்போது பல அரசியல் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கமல் ஹாசனை சந்தித்து, நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பு ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு கமலும் சம்மதம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *