கல்லூரி பெண்ணாக மாறிய சோனியா அகர்வால்!
காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், சோனியா அகர்வால். கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடைசியாக ‘குயின்’ என்ற வெப் தொடரில் அவர் நடித்து இருந்தார்.
கொழுகொழுவெனவும், மப்பும் மந்தாரமாகவும் இருந்து சோனியா அகர்வால், உடல் எடையை குறைக்க ஆர்வம் காட்டினார். தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டார். இதனால் அவர் மெலிந்து போன பிறகு காதல் கொண்டேன் படத்தில் வரும் கல்லூரி மாணவி போல் மாறியுள்ளார்.
உடல் எடை குறைந்த புகைப்படங்களை, சோனியா அகர்வால் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அவரது அழகை புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சோனியா அகர்வால் தற்போது தமிழில் ‘பகீரா’, ‘வார்டு’, 126′ காதலை தேடி நித்யா நந்தா’, ஷ், மற்றும் ‘கிராண்ட்மா’ எனும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.