கண் தானம் செய்த நடிகை!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் நடிகை நஸ்ரியா நசிம் வசனங்களை டப்ஸ் மாஷப் செய்து இணையத்தில் பிரபலமானார். ஒரு சில தென்னிந்திய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்.
96, செல்பி, உள்பட பல படங்களில் கதாநாயகியாக மற்றும் இரண்டாவது நாயகியாக நடித்து இருக்கிறார். இவருடைய சொந்த ஊர், பெங்களூரு. தென் இந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகி வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிக வாய்ப்பு வருவதாக தெரிவித்துள்ளார்.
சினிமாவை தாண்டி வர்ஷா பொலம்மாவுக்கு பொது சேவைகளிலும் ஆர்வம் அதிகம் உள்ளது. அதற்க்கு அடையாளமாக, இவர் தனது கண்களை தானம் செய்து இருக்கிறார். வர்ஷாவின் இந்த செயலுக்கு நண்பர்கள், திரையுலகினர் என அனைவரும் இவர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.