AK எங்கப்பா?… ஓட்டுப்போட அஜித் வராததற்கு காரணம் இதுதானாம்!

சட்டமன்ற தேர்தலில் கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய், இன்று சிவப்பு காரில் , கருப்பு மாஸ்க் அணிந்து வந்து வாக்களித்தது பேசு பொருளாகியுள்ளது. அதே சமயத்தில் அஜித் ஏன் வாக்களிக்க வரவில்லை என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். வாக்கு செலுத்த காரில் வந்த நடிகர் விஜய், வாக்குப்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டுக் கிளம்பினார்.

நடிகர் விஜய் வருகை தந்தபோது அங்கிருந்த சிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க முற்பட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே விஜய் ஓட்டி வந்த காரும், அவர் அணிந்திருந்த மாஸ்கையும் தேர்தல் குறியீடு என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் விஜய் கறுப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி தனது வாக்கினை பதிவு செய்தார். தனது காரை நிறுத்த இடமில்லாததாலும், வீட்டிற்கு அருகிலேயே விஜய் சைக்கிளில் வந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் சோசியல் மீடியாவில் விஜய் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கவே அப்படி வந்தார் என்ற கருத்து தீயாய் பரவியது.

இதேபோல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். ஆனால் ரஜினிகாந்த், அஜித், விஜயகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், திரிஷா, வடிவேலு, ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாக்களிக்க வராதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவரான அஜித் ஏன் வாக்களிக்க வரவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.

வலிமை பட ஷூட்டிங்கிற்கு பிறகு அஜித் உலகம் சுற்றும் வாலிபராக மாறிவிட்டார் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அடுத்தப்பட ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள் தனக்கு பிடித்த இடங்களில் பைக், சைக்கிள் என சவாரி செய்து வருகிறார். தற்போதும் அஜித் சென்னையில் கிடையாதாம், எங்கோ வெளியூரில் இருப்பதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலி வாக்களிக்க வரவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…