முத்தக்காட்சியில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகை டாப்சி!

தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வரும் நடிகை டாப்சி,இப்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்சிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளதான் வருகின்றன என்று கூறி உள்ளார். இந்த நிலையில் லூப் லபெட்டா இந்தி படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில்,”லூப் லபெட்டா படத்தில் நடிகர் தாஹிருக்கும்,எனக்கும் முத்தக் காட்சி இருந்தது.அதில் நடிக்கும்போது இயக்குனர் ஆகாஷ் பாட்டியாவின் ஆபாசமான பேச்சுக்கள் என்னை கடுப்பாகி விட்டது. முத்தக்காட்சிகளில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஓ.கே. ஆரம்பியுங்க, நைசா பேசி கொள்ளுங்க என வர்ணனை செய்து கொண்டு இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரது பேச்சு எல்லை மீறியது.தாஹிர் இதுபோன்ற பெண்ணை இதற்கு முன்பு எப்போதும் இவ்வளவு நெருங்கி பார்த்திருக்க மாட்டாய் .இப்படிப்பட்ட வாய்ப்பு உனக்கு எப்போதும் கிடைக்காது.முத்தமிடு என மேலும் ஆபாசமாக பேசினார்.இதனால் எனக்கு கோபம் வந்தது.பின்னர் முத்துக்காட்சியில் நடித்து முடித்தோம்.இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் இனி தொடரக்கூடாது என நினைக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…