தளபதிக்கே டப் கொடுப்பார் போலயே… நெல்சன் மகன் போட்ட ‘அரபிக்குத்து’ டான்ஸ்!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி இந்த படம் உருவாகியுள்ளது உள்ளது.இ ந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின. படத்தின் அப்டேட்டாக காதலர் தினத்தை முன்னிட்டு, அரபிக்குத்து பாடல் நேற்று வெளியானது.

அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான ‘அரபிக்குத்து’ பாடல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. வெளியான 48 மணி நேரத்திலேயே உலக அளவிலான டாப் 200 பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியப்பாடல் என்ற சாதனையை பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் படைத்துள்ளது. இந்நிலையில் பாடல் வெளியாகும் முன்பே அனிருத் சொன்னது போல் ‘பான் வேல்டு பாட்டு சார்’ என்பதை நிரூபிக்கும் விதமாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரபிக்குத்து பாடலுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

ஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது பங்கிற்கு ரீல்களை வெளியிட்டனர். அந்த வரிசையில் தற்போது பீஸ்ட் பட இயக்குநர் நெல்சனின் மகன் ஆத்விக்கும் நடமானடியிருக்கிறார். இந்த வீடியோவை நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CaHD_qOJqZn/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *