இன்று வெளியாகும் சூர்யா படத்தின் டீசர்!

சூர்யா கதாநாயகனாக நடித்து, பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லே போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மார்ச் 10 -ஆம் தேதியில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் பாடல்கள் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்லஎதிர்பார்ப்பு உள்ளது. காரணம் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்க்கு முன்ப சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியானது. நீண்ட எதிர்பார்ப்பு நிலவும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்து இருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்துதான் ‘சும்மா சுர்ருன்னு’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர் வெளியாவதர்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…