இணையத்தில் வைரலாகும் இந்தி ஜிகர்தண்டா!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களும், தரமான கததையம்சத்தை கொண்ட திரைப்படமும் வெளியாகி வருகிறது. ஒரு காலத்தில் பாலிவுட்டில் வெளியாகும் வெற்றி படைத்தை தமிழில் இயக்குவார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் மாபெரும் வளர்ச்சியால் தற்போது தமிழில் உள்ள வெற்றி படங்களை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

தமிழ் மொழியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அந்நியன், மாஸ்டர், துருவங்கள் பதினாறு, விக்ரம் வேதா, சூரரை போற்று, கைதி போன்ற திரைப்படங்களை தற்போது ரீமேக் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் 1, 2014-ஆம் தேதி தமிழில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், குரு சோமசுந்தரம் போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சமீபத்தில் இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ‘பச்சன் பாண்டே’ என்ற தலைப்பில், அக்ஷய் குமார் நடிப்பில் ஃபர்ஹத் சம்ஜி இயக்கதில் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் கிரித்தி சனம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ‘பச்சன் பாண்டே’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகிற மார்ச் 18-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…