ரஷ்ய மொழியில் வெளியாகும் கைதி திரைப்படம்!

கார்த்தி நடித்த கைதி படம் 2019-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படம் தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கைதி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வந்தனர்.

கைதி 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படம் ஆகிவிட்டதாகவும்,30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கைதி படத்தின் கதை தன்னுடையது என்று கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால் கைதி படத்தை ரீமேக் செய்யவும் இரண்டாம் பாகம் எடுக்க வும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் கைதி 2-ம் பாகத்திற்கு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனால் கைதி 2-ம் பாகம் எடுப்பதற்கான தடை நீங்கி உள்ளது. விரைவில் படவேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கைதி படத்தை பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது கைதி திரைப்படம் ரஷிய மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10-ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…