சூர்யாவை நோக்கி நடுங்கிய குரலில் ‘அண்ணா’ என்று அழைக்கும் பெண்!

சூர்யா கதாநாயகனாக நடித்து, பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லே போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மார்ச் 10 -ஆம் தேதியில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்லஎதிர்பார்ப்பு உள்ளது. காரணம் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்க்கு முன்ப சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியானது.

இந்தநிலையில் தான் இன்று ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். அறிவித்தபடியே படத்தின் டீசர் இன்று மாலை 6 மணியளவில் சன் பிக்சர்ஸ் யூடியூப் தளத்தில் வெளியானது. இமான் இசையில் இந்த திரைப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்து இருக்கிறார்.டீசரிலேயே வில்லனாக மிரட்டி உள்ளார் நடிகர் வினை. சூர்யாவை ‘அண்ணா’ என்ற அழைக்கும் பெண்னின் குரல் பார்வையாளர்களை நடுங்க வைக்கிறது. தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…