‘அரபிக் குத்து’ பாடலுக்கு போட்டியிடும் பிரபலங்கள்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காதலர் தினதன்று இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. வெளியான நாள் முதல் தற்போது வரை இந்த பாடல் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.

‘ஹலமதி ஹப்பி பூ’ என்ற இந்த பாடல் வெளியான 48 மணி நேரத்தில் உலக அளவிலான டாப் 200 பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியப்பாடல் என்ற சாதனையை பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் படைத்துள்ளது. தொடர்ந்து இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ரீல்ஸ் செய்யப்பட்டு வருகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். முதலில் இந்த பாடல் வெளியான போது, பூஜா ஹெக்டே மாலத்தீவில் இருந்து கப்பலில் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ பதிவை பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு அனிருத் தனது டீம் உடன் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து இருந்தார். இதனிடையே நேற்று நடிகை சமந்தா இந்த பாடலுக்கு வித்தியாசமாக நடனமாடி பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…