என்னாச்சு? சிம்புவிற்கு எதிரான பீப் பாடல் வழக்கு…

தமிழ் திரையுலகில் நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடன கலைஞர் என தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டி முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

கடந்த 2015-ம் ஆண்டு பீப் சாங் என்ற பெயரில் நடிகர் சிம்பு பாடிய பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடல் பெண்கள் குறித்து ஆபாச வரிகள் இடம்பெற்று இருந்ததால் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புக்கள் போராட்டம் நடத்தின. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துவரையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிம்பு மீது கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதியபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…