பூங்கா அமைக்கும் பணியில் நாகர்ஜுனா!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நாகார்ஜூனா. இவர் தனது திரையுலக பயணத்தை 1989-ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் கீதாஞ்செலி படத்தின் மூலம் அறிமுகமானார்.தொடர்ந்து பல வெற்றி பங்களில் நடித்து ஒரு காலத்தில் முன்னணி நடிகராகவும் இருந்தார்.

இவர் லக்ஷுமி டகுபதி என்பவரை 1984-ஆம் ஆண்டு மணமுடித்து பின்பு 1990ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்பு 1992 ஆம் ஆண்டு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நாகா சைதன்யா மற்றும், அகில் என்று இரு மகன்கள் உள்ளார். நாகார்ஜுனா படங்களில் நடிப்பதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

சமீபத்தில்தான் இவரது மூத்தமகன் தனது காதல் மனைவி நடிகை சமந்தாவை விவாகரத்து செய்ததார். இதனால் இவர்களது குடும்பத்தில் தொடர்ந்து சிக்கல்கள்,பிரச்சனைகள் கிளம்பி வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. நாகசைதன்யா சமந்தா விவாகரத்திற்கு பிறகு இவர்கள் குடும்பமாக எந்த ஒரு நிகழியிலும் அல்லது புகைப்படங்களையும் வெளியிடவில்லை.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சமூக வலைத்தளங்கலில் நாகார்ஜூனா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பூங்கா ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக தெலுங்கானாவில் உள்ள மெட்சல் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்து பூங்கா அமைக்கும் பணிக்கு அடிகள் நாடினார் நடிகர் ஆகார்ஜுனா. அப்போது எடுத்த புகை படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…