வடிவேலுக்கு அடித்த ஜாக்பாட்!

ஒரு காலத்தில் நகைசுவையின் உச்சத்தில் இருந்த வடிவேலு தொடர்ந்து பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசி பிரச்சாரம் செய்த போது, சில சட்ட சிக்கல்களில் சிக்கவே படங்களில் நடிக்க வடிவேலுவிற்க்கு தடை விதிக்க பட்டது. தற்போது அந்த தடை நீங்கி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி உள்ளார்.

இந்நிலையில் தற்போது சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு ரிட்டர்ன் ஆகிறார் மீம்ஸ் மன்னன் வடிவேலு. இந்த படத்தின் படபிடிப்பு விருவிருபாக நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் காதல் படங்களை இயக்கி பிரபலமான கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் வடிவேல் நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில், வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறேன். அது ஒரு காதல் நகைச்சுவை படமாக இருக்கும் . வடிவேலுவால்தான் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…