காதலரை புகழ்ந்து தள்ளும் சுருதி ஹாசன்!

பிரபல நடிகர் கமல்ஹாசன் மகளாக திரைத்துறைக்கு வந்தாலும் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான இடத்தை சம்பாதித்து கொண்டவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு,இந்தியில் அதிக படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

நடிகை சுருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதாக கூறியிருந்தார். மேலும் சுருதி, சமீபத்தில் எங்கள் இருவருக்கும் பெயின்டிங், கிராபிக்ஸ், நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். முதலில் நாங்கள் ஆன்லைனில் உரையாட ஆரம்பித்து நன்கு புரிந்து கொண்ட பிறகே காதலித்து வருகிறோம்.

நடிகை சுருதிஹாசன் அவ்வப்போது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இந்த நிலையில் சந்தனு ஹாரிக்கா புதிய ஓவியங்களை உருவாக்கி கண்காட்சி நடத்த உள்ளார். இந்த ஓவியங்களை பார்த்து நெகிழ்ந்து போன சுருதிஹாசன் வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உன்னை காதலிக்கவும், கவுரவிக்கவும் எனக்கு தினம் ஒரு புதிய காரணம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உன்னை பார்த்தால் எனக்கு பெருமையாக உள்ளது. உனது ஓவிய கண்காட்சியில் என்னையும் பங்கேற்க செய்தது பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…