வயதான தோற்றத்தில் மாதவன்!

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நடிகர் மாதவன். இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாறன். இந்த திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது. தொடர்ந்து இவர் 2 இந்தி திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வெளிவர உள்ளது. மேலும் இவர் ராக்கெட்ரி திரைப்படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

இது இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் நம்பி நாராயணன் வாழ்க்கை கதை. திரை யோஜனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக நம்பி நாராயணனை 1994-ம் ஆண்டு உளவுத்துறை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அவருக்கு நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த சம்பவங்களை மையமாக வைத்தே ராக்கெட்ரி படம் தயாராகி உள்ளது. இதில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மாதவன் தன்னை வயதான தோற்றத்துக்கு மாற்றிக்கொண்டு நடித்து இருக்கிறார். இதில் சூர்யாவும், ஷாருக்கானும் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள். இந்த படம் மலையாளம். இந்தி மொழிகளில் வெளியாக இருந்த நிலையில் கூடுதலாக தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…