விரைவில் வெளியாகும் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்!

சமீபத்தில் தான் சன்பிக்சர்ஸ் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை படைத்தது. இதை தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இமான் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன் சத்யராஜ் ரெடின் கிங்ஸ்லே போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் பாடல்கள் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

சமீபத்தில் தான் ‘சும்மா சுர்ருன்னு’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் பிப்ரவரி 18-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…