ஒரு வழியாக மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுல் ஒருவராக திகள்பவர் நடிகர் தனுஷ். அண்ணன் செல்வராகவன் இயக்கிய ‘துள்ளுவதோ’ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது சினிமாவில் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என தன திறமைகளை வெளிக்காட்டி உள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என பல மொழிகளில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த இரு வருடங்களாக இவர் நாடிபில் வெளியான திரைப்படம் ஓ.டி.டி தலத்தில் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள மாறன் திரைப்படமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. ஆனால் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

தொடர்ந்து பல படங்களில் தனுஷ் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் தான் இவரது திருமண வாழ்க்கை முடிவடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அப்போது பலர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது குழந்தைகளை பற்றி யோசித்து இருக்கலாம் என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இந்தநிலையில் நடிகர் தனுஷ் தனது சமூகவலைத்தளத்தில் தனது மூத்த மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தனுஷை போல ஆச்சு அசலாக இருக்கிறார் யாத்ரா தனுஷ். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…