வில்லனாகும் நடிகர் அஜித் குமார்!

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் தற்போது வெளியாவதற்கு தயாரான நிலையில் உள்ளது. வலிமை படம் இந்த மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அஜித் குமார் மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் அஜித் மற்றும் வினோத்கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை, போன்றபடங்கள் உருவாகி இருந்தன. தற்போது மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி அஜித்தின் 61-வது திரைப்படத்திற்கு இணைகிறார்கள்.

அஜித்தின் 61-வது படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த திரைப்படத்தில் வாலி, பில்லா, வரலாறு, படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். இதில் ஒரு வேடத்தில் வில்லனாகவும் இன்னொரு வேடத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்கான நடிகர்-நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல இந்தி நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவிவந்தன.

தற்போது இந்த படத்திற்காக அஜித் நீளமான தாடி வளர்த்து கோட் சூட் கண்ணாடி அணிந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது அஜித்தின் 61-வது படத்திற்கான தோற்றமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…