2 மணி நேரத்தில் அஜித் ரசிகர்களை கதறவிட்ட விஜய்!

vijay

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி இந்த படம் உருவாகியுள்ளது உள்ளது.இ ந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின. படத்தின் அப்டேட்டாக காதலர் தினத்தை முன்னிட்டு, அரபிக்குத்து பாடல் நேற்று வெளியானது.

Image

அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான ‘அரபிக்குத்து’ பாடல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. பாடல் வெளியாகி 2 மணி நேரத்திலேயே 1 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் லைக்கும் 1.4 மில்லியனை கடந்துள்ளது. இதற்கு முன்னதாக வலிமை பட ட்ரெய்லர் வெளியாகி 6 மாதங்களுக்குப் பிறகே 1.4 மில்லியன் லைக்குகளை தொட்டது. இதனை ட்விட்டரில் சுட்டிக்காட்டி விஜய் ரசிகர்கள், அஜித் ஃபேன்ஸை கதற வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…