இந்தியில் மாஸ் காட்டும் ‘வலிமை’ !

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இரண்டு வருடங்களுக்கு மேல் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாக வில்லை. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்தின் பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. வலிமை திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரீலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியடையும் விதமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வலிமை படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. தற்போது இதை உறுதி படுத்தும் விதமாக நேற்று அஜித் குமாரின் வலிமை போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது வலிமை படத்தை பற்றிய ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. வலிமை படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது வந்த தகவல் படி 24- ஆம் தேதி வெளியாகும் வலிமை படம் இந்தியில் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…