காதலர் தினத்தை கொண்டாடிய நயன், விக்னேஷ் சிவன்!

நடிகர் நயன்தாராவுக்கும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 2015-ஆண்டில் இருந்தே காதலித்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது, கோவில்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது போன்ற புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர்.

இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.அனாலும் இன்னும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த வருடம் இறுதியில் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்தும் நடக்கவில்லை.

எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.இந்த வருடம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று இவர்களது நெருங்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.இந்த நிலையில் நயன்தாராவும் , விக்னேஷ் சிவனும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடினார்கள்.

நயன்தாராவுக்கு வலைத்தளத்தில் விக்னேஷ் சிவன் வாழ்த்து சொல்லி இருவரும் செல்பி எடுத்துகொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…