சாய்பல்லவியை பாராட்டிய மஞ்சிமா மோகன்!

தமிழில் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது உடல் எடை கூடுவதை கேலி செய்பவர்களுக்கு மஞ்சிமா மோகன் பதிலடி கொடுத்துள்ளார். உடல் எடை கூடியதை பலர் விமர்சிக்கும் நிலை உள்ளது. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று மஞ்சிமா மோகனுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து மஞ்சிமா மோகன் கூறும்போது, என்னை பொறுத்தவரை ஆரோக்கியமாக இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.

ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம். ஒல்லியாக இருந்தால் உடலில் கோளாறு இருக்கிறதா என்று கேட்பார்கள். குண்டாக இருந்தால் ஏன் அதிக குண்டாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். எனவே நாம் எப்படி இருந்தாலும் உடல் தோற்றத்தைப் பார்த்து விமர்சிக்கும் நிலைமை இருக்கத்தான் செய்யும்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். இந்த விஷியத்தில் சாய்பல்லவியை எனக்கு பிடிக்கும். நடிகை சாய் பல்லவி நம்பிக்கையோடு தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…