லதா மங்கேஸ்கரின் சொத்துக்கள் யாருக்கு?

புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் 1942-ல் தனது 13-வது வயதில் இசை உலகில் அடியெடுத்து வைத்தார். 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். இவர் ஆரம்பத்தில் வெறும் 25 ரூபாய் சம்பளம் வாங்கினார். கடைசி காலத்தில் அவருக்கு மாதம் ரூ. 40 லட்சம் வருவாய் வந்ததாக கூறப்படுகிறது.

லதா மங்கேஷ்கருக்கு மொத்தம் ரூ.368 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. மும்பை பெடர் சாலையில் பங்களா வீடு உள்ளது. இந்த வீடு பல கொடிகள் மதிப்பு கொண்டது. இதில்தான் லதா மங்கேஷ்கர் வசித்து வந்தார். இந்த வீட்டில் நகைகள்,கார்களும் உள்ளன.லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ளவில்லை.இவருக்கு ஆஷா போஸ்லே, மீனா கட்கர்,உஷா மங்கேஷ்கர் ஆகிய 3 தங்கைகளும்,ஹிருதயநாத் மங்கேஷ்கர் என்ற தம்பியும் உள்ளனர்.

இவர்கள் சொத்துக்களுக்கு வாரிசுகள் ஆகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லதா மங்கேஷ்கர் தனது தந்தை பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதற்கு சொத்துக்களை எழுதி வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில நாட்களில் சொத்துகள் யாருக்கு என்ற தகவல் வக்கீல் மூலம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…