நடிகர் மோகனுடான் முதல் முதலில் ஜோடி சேரும் குஷ்பு!

இயக்குனர் மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவரது கிளிஞ்சல்கள் படம் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி, இளமை காலங்கள், மவுனராகம், உயிரே உனக்காக, கோபுரங்கள் சாய்வதில்லை உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. 2008-ல் சுட்ட பழம் என்ற படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார். இவர் நடிக்க உள்ள படத்தை விஜய் ஸ்ரீ டைரக்ட் செய்கிறார். இவர் சாருஹாசன் நடித்த தாதா 87 என்ற படத்தை டைரக்ட் செய்து பிரபலமானவர்.

இந்த படத்துக்கு ஹரா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். மோகனும் குஷ்புவும் ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் முதல் முறையாக ஜோடி சேர்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் ஊட்டியில் துவங்குகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…