சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை!

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிபில் வெளிவந்த டாக்டர் படம் நல்ல வசூல் ஈட்டியது. தொடர்ந்து அயலான், டான் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரதயாராக உள்ளது. தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

விஜய், தனுஷ் ஆகியோர் தமிழ், தெலுங்கில் தயாராகும் படங்களில் நடித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இது சிவகார்த்திகேயனுக்கு 20-வது படம் ஆகும். இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் அனுதீப் கே.வி இயக்குகிறார். இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்ணை நாயகன் காதலிப்பது போன்ற திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக வெளிநாட்டு நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகை யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை மரியா போஷாப்கா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் மரியா போஷாப்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மோரிஸ் ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் தயாராகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…