உடல் உறுப்புகளை தானம் செய்த வில்லன் நடிகர்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் ஜெகபதி பாபு. இவர் தமிழில் லிங்கா, பைரவா, தாண்டவம், கத்தி சண்டை, விஸ்வாசம், அண்ணாத்த உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் வில்லனாகவே படங்களில் நடித்து இருக்கிறார்.

ஜகபதி பாபு தனது 60-வது பிறந்தநாளை இரு தினங்களுக்கு முன்பு கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி தனது உடல் உறுப்புகளை ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தானம் செய்வதாக அறிவித்தார். தன்னைப்போல் ரசிகர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து ஜெகபதிபாபு கூறும்போது, திரையுலகினர் மத்தியில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெறவேண்டும். அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மரணத்துக்குப் பிறகு மற்றவர்களுக்குப் பயன்படும் படி வாழ்க்கையை விட்டு செல்வது நல்ல விஷயம். நாம் வாழ்கிற இந்த சமூகத்திற்கு ஏதேனும் திருப்பிக் கொடுக்க முடிந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…