அவமானப்படுத்திய இயக்குனர் படத்தில் நடிக்க மறுக்கும் கதாநாயகி!

தமிழில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தளபதி விஜய்க்கு ஜோடியாக தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கு இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஒரு காலத்தில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று இயக்குநர்கள் முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துள்ளனர்.

ஆனாலும் நம்பிக்கையோடு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடைசியாக வெற்றி அவரைத் தேடி வந்தது. பண மழை கொட்டியதால் தயாரிப்பாளருக்கு பூஜா ஹெக்டே அதிர்ஷ்ட தேவதையாக மாறிவிட்டார். முன்னணி இந்தி இயக்குனர் ஒரு காலத்தில் பூஜா ஹெக்டே தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை வைத்து படம் எடுத்தாராம்.

அந்த சம்பவம் பூஜாவுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. இப்போது அதே இயக்குனர் தனது படங்களில் நடிக்க கால்சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பூஜா, ஆரம்ப காலத்தில் தன்னை அவமானப்படுத்தியர் படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம். மிகப்பெரிய அளவில் சம்பளம் தருவதாக பேசி பார்த்தும் பூஜா ஹெக்டே சம்மதிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…