காதலர் தினம் அன்று கருப்பு சட்டை அணிந்து வந்த தளபதி!

Arabic Kuthu

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி இந்த படம் உருவாகியுள்ளது உள்ளது.இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின. படத்தைப் பற்றி அவ்வப்போது லேட்டஸ்ட் அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் போட்ட ட்வீட் ட்விட்டரில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.

இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை இரு தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். காதலர் தினம் அன்று பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகும் என்று படக்குழுவினர் ஒரு ப்ரோமோ விடியோவை வெளியிட்டனர். தற்போது அறிவித்தபடி இன்று காதலர் தினத்தன்று மாலை 6 மணிக்கு சன் பிக்ச்சர்ஸ் யூடியூப் தலத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் வரிகள் புரியவில்லை என்றாலும் பாடல் முழுக்க மாஸ் காட்டுகிறார் தளபதி. காலங்கள் போக போக இளமையாக மாறி வருகிறார் தளபதி என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துவருகிறார்கள். தற்போது தளபதியின் ஹலமதி ஹபீபு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…