தனுஷ், மாளவிகா மோகனின் காதலர் தின ஸ்பெஷல் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் 43-ஆவது திரைப்படம் ‘மாறன்’. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்த படத்தின் ஹாட்டான பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாறன் படத்தின் முதல் பாடலாக ‘பொல்லாத உலகம்’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்பாடலை நடிகர் தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் தனுஷ் மாற்றும் மாளவிகா மோகன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்துக்களை தெரிவித்து உள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…