புனித் ராஜ்குமார் மறைவிக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர்!

கடந்த ஆண்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு நாம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொலைக்காட்சியில் தன் நடிப்பு பயணத்தை துவங்கி பாடகராகவும், தொலைக்காட்சி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தனது பன்முக திறைமைகளை வெளிப்படுத்தி வந்தவர். கடந்த ஆண்டு இவரின் திடீர் மரணம் ரசிகர்களை மட்டும் இல்லாமல் திரை உலக பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

புனித் ராஜ்குமார் மறைவிற்கு பிறகு கன்னட நடிகர்களை தாண்டி தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தை சந்தித்து பேசினார்கள். அதேபோல் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களை இன்று முகாம் அலுவலகத்தில் மறைந்த கன்னட திரைப்பட நடிகர் திரு. ராஜ் குமார் அவர்களின் மகளும் கன்னட திரைப்பட நடிகருமான திரு. சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி திருமதி கீதாசிவராஜ் குமார் ஆகியோர் சந்தித்தபோது, அவரது சகோதர திரைப்பட நடிகர் திரு. புனித்குமார் அவர்களின் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் புனித் ராஜ் குமார் இறப்பதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்தார். சில திரைப்படங்களில் நடித்து முடித்தும் இருந்தார். இயக்குனர் சேத்தன் குமார் இயக்கத்தில், நடிகர் புனீத் குமார் கதாநாயகனாக நடித்து உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜேம்ஸ்’. இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பிரியா ஆனாந்த், ஸ்ரீகாந்த் மேகா, அனுபிரபாகர் போன்ற பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச்-17 ஆம் தேதி 5 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…