தெலுங்கில் பேசிய நடிகர் சூர்யா..இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஜெய்பீம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அனுமோகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இணைந்து வினை ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ். பாஸ்கர் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசை அமைத்திருக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில்தான் இந்த படத்தின் முதல் சிங்கிள் வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், தற்போது, இந்த படத்தின் தெலுங்கு டப்பிங்கிலும் நடிகர் சூர்யாதான் குரல் கொடுக்கிறார். இந்த தகவலை படக்குழு சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

Suriya Sivakumar: Special attraction for Hero Surya movie .. Like for 'Eti'  movie .. | Surya new movie Etharkkum Thunindhavan latest update - filmyzoo  - Hindisip

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…