சமுத்திரக்கனியை பாராட்டிய ராமதாஸ்!

இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘அடுத்த சாட்டை’ (சாட்டை-2). 2019-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 2012-ஆம் ஆண்டு வெளிவந்த சட்டை படத்தின் பாகம் இரண்டு. இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க யுவன், அதுல்யா, தம்பி ராமையா, கவுசிக் சுந்தரம், ஸ்ரீ ராம், ஜார்ஜ் மரியான் நாடோடிகள் கோபால், பாண்டி, ஜீவா ரவி போன்ற பலர் நடித்திருந்தார்கள்.

சாட்டை படம் பள்ளி மனவர்கை பற்றிய கதியாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் சாட்டை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. அடுத்த சாட்டை படம் கல்லூரி மாணவர்களை மையப்படுத்தி எடுக்கபட்டு இருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

ஆனால் 2019-ல் வெளிவந்த அடுத்த சாட்டை திரைப்படத்தை தற்போது பார்த்த பா.ம.க கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் சமூத்திரக்கனியை புகழ்ந்துள்ளார். கடந்த வாரம்தான் இவர் இந்த திரைப்படத்தை பார்த்ததாக கூறினார். தனியார் கல்லூரிகளின் ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் நல்ல திரைப்படம் என கூறி சமுத்திரக்கனியை பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…