தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்!

ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர், மற்றும் ஸ்பின் பவுலரான கிளென் மேக்ஸ்வெல், ஐபிஎல்லில் கடந்தாண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இதையடுத்து இந்த முறை ஐபிஎல் ஏல போட்டியில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூர் அணி இவரை 11 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளென் மேக்ஸ்வெல் காதலியான வினிராமன் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் மெல்போர்னில் பார்மஸி படித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து நீண்டகாலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவரகளின் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். மேலும், அவர்களுக்கு இந்திய சம்பிரதாயப் படி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதனையடுத்து, கொரோனா காலக்கட்டதில் வரிசயாக ஊரடங்குகளும், தளர்வுகளுமாக இருந்ததால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது கொரோனாவின் தாக்கமும் குறைந்த படி இருந்ததால் மார்ச் 27ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போர்னிஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒரு தமிழ் பெண்ணை மணக்கிறார் என்றதும் இணையவாசிகள் அனைவரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இவர்களுது புகைப்படங்களை இணையத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளதால் இது வரவேற்கத்தக்கதாக இருப்பதாக இணையத்தில் கருத்துக்கள் குவிந்த படி இருக்கின்றன. மேலும், இவர்களுக்கு மார்ச் 27 ஆம் தேதி மெல்ல் திருமணம் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…