விளம்பர படத்தில் நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்!

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வசுருக்கிறார். இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘சர்க்காரு வாரி பாட்ட’. இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபுவுற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து வெண்ணில கிஷோர், ராஜா சேகர், சுப்பா ராஜு போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஜி. மகேஷ் பாபு என்டேர்டைன்மெண்ட், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மைத்திரி மூவி மேகர்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். எஸ். தமன் ‘சர்க்காரு வாரி பாட்ட’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாக தயாராக உள்ளது.

சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வருகிற மே மாதம் 12-ஆம் தேதி உலகமும் முழுவதும் ‘சர்க்காரு வாரி பாட்ட’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். படங்களில் நடிப்பதை தாண்டி மகேஷ் பாபு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அபிபஸ் டிக்கெட் புக்கிங் ஆப் விளம்பரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பிரம்பாண்டமான குளிர் பானம் விளம்பரத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் மகேஷ் பாபு நடித்திருந்தார். வெறும் 50 நொடிகள் இருக்கும் விளம்பரத்திற்கு மகேஷ் பாபு 14 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…