மயக்க மருந்திற்கு பதிலாக இளையராஜாவின் பாடலா ?

என் இசையால் தானே வாழ்கிறீர்கள் என்று இளையராஜா சொல்லும் போது ஒரு சிலருக்கு கோவம் வந்தது. ஒரு சிலர் தலைக்கணம் என்றனர். ஒரு சிலர் சிரித்தனர். பலர் உண்மை தானே என்றனர், என் போல். அப்படியான ஒரு உண்மை நிகழ்வை அப்போலோ மருத்துவமனை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

மார்பக புற்றுநோயோடு போராடி கொண்டு இருந்த சீதாலட்சுமி அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் வழக்கமான மயக்க மருந்து அளித்து சிகிச்சை செய்ய அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை அதனால் பாதி மயக்க நிலையில் இருக்கும் Local anaesthesia மருந்து மூலம் அறுவை சிகிச்சை தொடங்கி இருக்கிறது.

அறுவை சிகிச்சை தொடங்கிய போது, ​​ சீதாலட்சுமி அவர்கள் தனது ஆழ்ந்த மயக்கநிலையில் பாட ஆரம்பித்து உள்ளார்.தொடர்ந்து அவர் பாடலை முணுமுணுக்க அவரது உடல்நிலை சிகிச்சைக்கான நிலைக்கு மேம்பட்டு இருக்கிறது . இதனை கண்ட மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்து உள்ளனர். மேலும் அந்த நிகழ்வினை கூறும் போது அந்த சிகிச்சை அரங்கின் சூழல் அதற்கு பிறகு இனிமையானதாகவும் அமைதியானதாகவும் மாறியதாக கூறுகின்றனர். மேலும் சீதாலக்ஷ்மி ஒரு பயிற்சி பெற்ற பாடகர் என்று அவர்களுக்கு தெரிந்தாலும். அந்த சிகிச்சை அரங்கிற்குள் நடந்தது magical அனுபவமாக கூறுகின்றனர்.

தொடர்ந்து சீதா அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பாடல்களைப் பாடியுள்ளார். இதனை கவனித்து வந்த மருத்துவ குழு அதில் ஒரு பொதுவான விஷயத்தை கண்டுபுடித்தனர். அது சீதா அவர்கள் பாடிய அனைத்து பாடலும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள். இந்த சிகிச்சையின் போது ஏற்படும் கடும்வலி இடர்களுக்கு மத்தியில் ஒருவர் கவலையைப் போக்க இளையராஜா அவர்களின் பாடல்களைப் பாடுவதைப் பார்ப்பது நம்பமுடியாததாக இருந்தாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதை பற்றி மேலும் கூறுகையில், சிகிச்சையின் போது அவர்கள் இளையராஜாவை புடிக்குமா என்று கேட்க ” ஆமா அவர யாருக்கு பிடிக்காது! அவர் ஒரு Legend “. என்று கூறியுள்ளார். இந்நிகழ்வினை அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தங்கள் சக ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு, அவர்களது தகவல் தொடர்பு குழு நடந்த அனைத்தையும் கூறி இளையராஜா அவர்களை சந்திக்க முயற்சி செய்தனர். அதாவது சீதாலக்ஷ்மி அவர்கள் உங்களை நேரில் காண்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவதோடு அவர் விரைவாக குணமடைய இது உதவும் என்று வேண்டியுள்ளனர்.

அதற்கு பிறகு நடந்த நிகழ்வு தான் இந்த புகைப்படம். தனது உயிர் காக்கும் வேளையில் subconcious ஆழ்நிலையில் பதிந்த ஒரு மனிதனை சீதாலக்ஷ்மி அவர்கள் நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். முழு நிகழ்வின் சுருக்கம் ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் எனும் இளையராஜாவின் இசை பாடலில் கங்கை அமரன் எழுதிய வரிகளுக்கு பொருந்தும்.” ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது.. வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது ..இசை என்றானது …ஆஹா..”

ராஜாவின் இசை – முடிவிலி

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…