சூப்பர்ஸ்டாரை இயக்கும் நெல்சன்-உண்மையா?காத்திருப்போம்….

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பலமான வசூல் சாதனை படைத்தது இருந்தது. மேலும் இந்த படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உடல் னால குறைவு ஏற்பட்டு தற்போது மீண்டும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

இந்த செய்தி வெளியானதும் சூப்பர் ஸ்டார் படத்தை யார் அடுத்தது யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி காட்டு தீ போல் பரவியது. தற்போது இந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த டாக்டர் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியிடுவதாக அறிவித்து இருந்தனர். அதனால் ரசிகர்கள் சூப்பர்ஸ்டார் படத்தை பற்றிய அப்டேட்டாக தான் இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…