இரண்டு கதாநாயகிக்கு நடுவில் விஜய் சேதுபதி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வர தயாராகி உள்ள திரைப்படம் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிதும் பேசப்பட்டது.

இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் அனிருத். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கை பற்றியுள்ளது என்றும், சேட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்து என்றும் பல தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் அறிவித்திருந்தனர். அறிவித்த படியே படத்தின் டீசர் வெளியாகிறது என்று உறுதிப்படுத்துவதற்காக படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் டைட்டானிக் படத்தின் போஸ்டரை போல் இரண்டு கதாநாயகியின் நடுவில் விஜய் சேதுபதி இருக்கிறார். ஒரு பக்கம் சமந்தா மறுபக்கம் நயன்தாரா இருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…