விஜய் மகன் இயக்கும் படத்தில் விக்ரமின் மகன்!

தந்தை விக்ரமுடன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகன் படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. இந்த நிலையில் துருவ் விக்ரம் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், மகான் படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது தந்தை விக்ரமின் தீவிர ரசிகன் நான். அவரை எதிர்கொண்டு நடித்தது கஷ்டமாகவும், மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

கதாபாத்திரத்திற்கு 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன். நடிப்பின் மீது எனக்கிருக்கும் பற்றை இந்த படத்தின் கதாபாத்திரம் மூலம் பிரதிபலித்து இருக்கிறேன். விக்ரம் மகன் நன்றாக நடிக்கிறார் என்று பெயர் கிடைத்தால் போதும். சிறு வயதிலிருந்தே அப்பாவின் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்திருக்கிறேன். கொரோனா பரவல், 50% இருக்கை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

ஓ.டி.டி.க்கும் ரசிகர்கள் உள்ளனர். வணிக படம், மாஸ் படங்கள் என்று இல்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. தனிப்பட்ட முறையில் நடிக்க கதைகள் கேட்டிருக்கிறேன். அதில் ஒரு கதையை தேர்வு செய்து விரைவில் நடிப்பேன். அடுத்த காதல் கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க விருப்பம் உள்ளது. எனது தந்தை விக்ரம் நடித்த பீமா படம் மிகவும் பிடிக்கும். அந்தப்படத்தின் இளம்வயது பீமா வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் நான் நடிப்பேன். நடிகர் விஜய் மகன் சஞ்சயை சிறுவயதில் இருந்தே தெரியும். சினிமா பற்றி நிறைய கற்று வருகிறார். நல்ல கதையுடன் என்னை வைத்து படம் இயக்க வந்தால் அவரது இயக்கத்தில் நடிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…