பிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் கௌதம் கார்த்திக்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ஆவார். 2013-ஆம் ஆண்டு வெளிவந்த கடல் திரைப்படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ எதோ, வை ராஜ வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹாரா ஹாரா மஹாதேவகி, இந்திரஜித் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லு போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வெளியானது. தொடர்ந்து கவுதம் கார்த்திக் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். பத்து தல, யுத்த சத்தம், சிப்பாய் போன்ற படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் தேவராட்டம் படத்தில் நடிகை மஞ்சுமா மோகனுடன் இணைந்து நடித்த இருந்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரும் 2 வருடம் மறைமுகமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் செய்திகள் பரவி வருகிறது. மஞ்சுமா மோகன் 2016-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…