ஒல்லியான நடிகைகளை வெறுக்கும் தென்னிந்திய ரசிகர்கள்!

சினிமா துறையில் கதாநாயகிகள் ஆரம்ப காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தற்ப்போது பகிர்ந்து வருகிறார்கள். இந்த பட்டியலில் எரிகா பெர்னான்டஸ் தன்னுடைய அனுபவங்களையும் சேர்ந்துள்ளார். இவர் தமிழில் 555, விரட்டு, விழித்திரு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார். எரிகா பெர்னாண்டஸ் அளித்துள்ள பேட்டியில், தென்னிந்தியாவில் கதாநாயகிகள் குண்டாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நான் ஒளியாக இருந்தேன். இதனால் நான் குண்டாக தெரிவதற்காக இயக்குனர்கள் என் உடல் மீது பல இடங்களில் பேட் பொருத்தி கஷ்டப்படுத்தினர்.

கால் பகுதியிலும் பேட் வைத்தனர். அது எனக்கு அவமானமாதவும், ஆட்சேபகரமாகவும் இருந்தது. உடலில் பல இடங்களில் பேட் அணிந்து நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். இது கூட ஒரு விதமாக தேக அவமதிப்பு தான் என தோன்றியது. நான் வந்த புதிதில் அப்படி இருந்தது. இப்போது நிலைமை மாறி ஒல்லியாக இருந்தாலும் நடிகைகளை தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…