ஸ்வீடனை தெறிக்கவிட்ட விஜய், தனுஷ் பட பாடல்கள்… என்னா ஆட்டம் போட்டிருக்காங்க பாருங்க!

Swedan

ஸ்வீடனில் நடைபெற்று வரும் Talang என்ற நிகழ்ச்சியில் தமிழ் பாடலுக்கு உற்சாக நடனமாடிய இந்தியாவைச் சேர்ந்த நடனக்குழு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாத்தி கம்மிங்’ மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘மாரி’ பட பாடல்கள் யூ-டியூப்பில் பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து செய்து வருகிறது. பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டான இந்த பாடல் தற்போது உலக அரங்கிலும் ஒலித்து தமிழர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழில் தொலைக்காட்சிகளில் நடைபெறும் டான்ஸ் ஷோக்களைப் போலவே வெளிநாடுகளிலும் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுகின்றன. ஸ்வீடனில் Talang என்ற டான்ஸ் ஷோ மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடன கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த Indisk Fika என்ற நடன குழுவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், Indisk Fika நடனக்குழுவினர் மாஸ்டர் மற்றும் மாரி படங்களில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’, ‘மாரி’ ஆகிய பாடல்களுக்கு துள்ளல் நடனமாடி அரங்கையே அதிர வைத்துள்ளனர். துடிப்பான நடன அசைவுகள், மிரட்டலான மியூசிக்கை கேட்ட நிகழ்ச்சி ஜட்ஜ்கள் கூட எழுந்து நின்று நடனமாடியுள்ளார். கடைசியாக இந்தியாவின் Indisk Fika நடன குழுவினர் Golden Buzzer பாராட்டைப் பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…