“நம்பற மூஞ்சா இது” அனிருத், நெல்சனை கழுவி ஊற்றிய விஜய்!

Beast

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின. படத்தைப் பற்றி அவ்வப்போது லேட்டஸ்ட் அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில், இன்று காலை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் எனக்குறிப்பிட்டது. நியூஸைக் கேள்விப்பட்டதும் ‘போடுறா வெடிய’ என ஆர்வமாக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு செம அப்டேட் கிடைத்துள்ளது.

இதையடுத்து பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த புரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் இணைந்து அரபிக் குத்து என்ற முதல் சிங்கிளுக்கான டிஸ்கஷன் போவது போல காட்டப்படுகிறது. அதன் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ஃபோனில் விஜய்யை தொடர்பு கொள்ளும் அனிருத், பாடல் குறித்து பகிர்ந்துக் கொள்கிறார். போனில் இருந்த படியே பாடலை போட்டுக்காட்ட சொல்கிறார், உடனே அனிருத்தும் பாட்டை ப்ளே செய்ய, பாதியிலேயெ நிறுத்தும் விஜய், ‘எனக்கும் சுத்தமா எதுவும் புரியல, நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஈவ்னிங் பாட்டை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துடுங்க’ என சொல்கிறார்.

வீட்டுக்கா? என ஷாக்கான அனிருத், நெல்சன் இருவரும் விஜய்யிடம் பாட்டு சூப்பரா வரும் சார் எங்களை நம்புங்க என சொல்கிறார்கள். ஆனால் அதை ஏற்காத விஜய் ‘உங்க இரண்டு பேரையும் நம்புறதா? நம்புற மாதிரி மூஞ்சியா அது ரெண்டும். கொஞ்சம் மிஸ் ஆனால் நம்பள ஏமாத்திடுவாங்க போல இருக்குன்னு’ என கலாய்த்துள்ளார். இதோ அந்த வீடியோ….

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…