இதுதான் நான்…நடிகை இலியானா இட்ட பதிவு!

தமிழ் சினிமாவில் இடுப்பழகி என்ற பெயர் பெற்றவர் இலியானா. இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை இலியானா தவிர்த்து வந்தார். அதேவேளை சமூக வலைத்தளங்களில் மட்டும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

பழைய புகைப்படங்களையும், புதிதாக எடுத்த புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். படங்கள் வராத போதும் இலியானாவின் ரசிகர்கள் அவரது புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் சிவப்பு நிற உடையில் பளிச்சிடும் தனது புகைப்படத்தை வெளியான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் உள்ளத்தை அள்ளும் மெலிந்த தேகம் கொண்ட எளிதான இலியானா, குண்டான தோற்றத்தில் இருந்ததுதான். சதைப்பிடிப்பான தேகத்தில் உள்ள தனது புகைப்படத்துடன் சில வாசகங்களையும் இலியானா பதிவிட்டுள்ளார். அதில் உடம்பு ஒல்லியாக காட்டும், வெள்ளையாக காட்டும், சில செயலிகளை நான் செல்போனில் இருந்து நீக்கி விட்டேன் என் உடலின் ஒவ்வொரு அசைவுகளையும், வளைவுகளையும் நான் ரசிக்கிறேன். இதுதான் நான் என பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…