லதா மங்கேஸ்கர் மறைவுக்கு-நாடு முழுவதும் துக்கம்!

இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகி லதா மங்கேஸ்கர். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி உள்ளார் லதா மங்கேஸ்கர். பின்னர் இந்தி படம் ‘வான ரதம்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. 1956-ம் ஆண்டிற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் பாடாமல் இருந்தார் லதா மங்கேஷ்கர். அவரை 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த மாதம் லதா மங்கேஸ்கர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது இவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டர் கண்காணிப்பில் இருகிறார் என்ற செய்தி நேற்று வெளியானது.இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கோடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று ஒன்றியரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…