ராட்சசன் இந்தி ரீமேக்கில் இணையும் பிரபல முன்னணி நடிகை!

தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். மாதவன் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் தேவா, கார்த்தி நடித்த கைதி, விக்ரமின் அந்நியன் மற்றும் மாநகரம் உள்ளிட்ட படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன.

விஜய்யின் மாஸ்டர், நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகிய படங்களையும் இந்தியில் எடுக்க முயற்சிசெய்து வருகிறார்கள். இதுபோல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. 2019 தெலுங்கு சக்சஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்ப்பை பெற்றது.

இதையடுத்து இந்தியிலும் ராட்சசன் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார் என்றும் அறிவித்து இருந்தனர். இந்தநிலையில் ராட்சசன் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க ராகுல் பிரீத்சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த திரைப் படத்தை ரஞ்சித் திவாரி இயக்குகிறார். படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *