பூர்வீக வீட்டை விற்ற அமிதாப்பச்சன்!

இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு மும்பையில் நிறைய சொத்துக்கள் உள்ளன. பங்களா வீடுகளிலும் வாங்கி போட்டுள்ளார். மும்பை ஜுஹு பகுதியில் அவருக்கு ஐந்து பெரிய பங்களா வீடுகள் உள்ளன. கடந்த வருடம் மும்பை அந்தேரி பகுதியில் 5 ஆயிரத்து 184 சதுர அடி பரப்பளவில் புதிதாக இரண்டு வீடுகளை ரூ.31 கோடிக்கு வாங்கினார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள தனது பழமையான பூர்வீக குடும்ப வீட்டை தற்போது ரூபாய் 23 கோடிக்கு அமிதாப்பச்சன் விற்றிருக்கிறார். அமிதாபச்சன் சினிமாவில் நடிப்பதற்காக மும்பைக்கு குடிப்பெயர்வு அதற்கு முன்னால் இந்த டெல்லி பங்களா வீட்டில் தான் பெற்றோருடன் வசித்து வந்தார். இதுதான் அவர் குடும்பத்தின் முதல் வீடு.

இந்த வீட்டை விற்க அமிதாப்பச்சன் முடிவு செய்ததும் பலர் வாங்க முன்வந்தனர். இறுதியில் அந்த வீட்டின் அருகில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரே ரூ.23 கோடிக்கு கொடுத்து வாங்கி இருக்கிறார். தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…