நடிகை அமிர்தாவுற்கு வந்த சிக்கல்!

நடிகர், நடிகைகள் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி கருத்துக்கள், தாங்கள் நடிக்கும் புதிய படங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த கணக்குகளுக்குள் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்குவது வழக்கமாக நடக்கிறது.

ஏற்கனவே முன்னணி நடிகர்- நடிகைகளின் கணக்குகள் முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பிரபல இளம் நடிகை அமிர்தா ஐயரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். இவர் விஜய்யின் பிகில், விஜய் ஜேசுதாஸ் உடன் படைவீரன், விஜய் ஆண்டனியுடன் காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது சுந்தர் சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அமிர்தா ஐயர் கூறும்போது, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ முடக்கி இருக்கிறார்கள். அது மீட்க்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது. இதிலிருந்து மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…