தள்ளி போகும் தளபதி படம்!

தளபதி விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றனர். அடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளது. இது தளபதியிக்கு 66-வது படம். குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

கடந்த இருபது வருடங்களில் இதுபோன்ற கதையை கேட்டது இல்லை என்றும், இது தனது திரையுல வாழ்க்கையில் முக்கிய பாடப்படமாக இருக்கும் என்றும் விஜய்யே நெகிழ்ச்சியோடு தெரிவித்ததாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.

இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கவும், தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை மேலும் சில வாரங்களுக்கு தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கதாநாயகி உள்ளிட்ட இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…